கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த கனடிய பெண்! அவர் உடலில் இருந்த பற்களின் அடையாளம்

Report Print Raju Raju in கனடா

கியூபாவுக்கு சென்ற கனடிய பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கனடாவின் Quebec-ஐ சேர்ந்தவர் Antoinette Traboulsi. இவர் கியூபாவுக்கு சென்ற நிலையில் சமீபத்தில் அங்குள்ள கடற்கரை மணலில் புதைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

Antoinette Traboulsi கொலை செய்யப்பட்டார் என பொலிசார் உறுதி செய்தனர்.

அவரின் முகம் மற்றும் மார்பு பகுதியில் பற்களால் கடிக்கப்பட்ட பற்களின் அடையாளம் இருந்துள்ளது.

மேலும் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் Antoinette கொலை தொடர்பில் நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆனால் அவரின் பாலினம், வயது மற்றும் பெயர் போன்ற எந்தவொரு விபரமும் இன்னும் வெளியிடப்படவில்லை.

அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பில் மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்