மகனை ட்ரக்கில் கடத்திச் சென்ற தந்தை... துப்பாக்கியால் சுட்ட பொலிசார்: ட்ரக்குக்குள் கண்ட பரிதாப காட்சி

Report Print Balamanuvelan in கனடா

தன் ஒரு வயது மகனை அவனது தந்தை கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலின்பேரில் பொலிசார் அவரது ட்ரக்கை துரத்திச் செல்லும்போது நடந்த தொடர் அசம்பாவிதங்களில் ஒரு அப்பாவி உயிர் பலியாகியுள்ளது.

ரொரன்றோவுக்கு 130 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Kawartha Lakes என்ற பகுதியில் பொலிசார் அந்த ட்ரக்கை நிறுத்த முயன்றுள்ளனர்.

அப்போது அந்த ட்ரக் பொலிஸ் வாகனம் ஒன்றின் மீது மோதியதில், பொலிஸ் வாகனத்துக்கு அருகே நின்ற பொலிசார் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அந்த ஒரு வயது சிறுவனை கடத்திச் சென்ற 33 வயது நபர் இருந்த ட்ரக் மீது பொலிசார் மூவர் சுட்டதில், ட்ரக்கை ஓட்டிய நபர் மீது குண்டு பாய்ந்ததில் அவரும் படுகாயமடைந்துள்ளார்.

பொலிசார், அந்த ட்ரக்கை ஆய்வு செய்தபோது, அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் காட்சி ஒன்று அங்கு காத்திருந்தது.

ஆம், அந்த ட்ரக்கின் பின் இருக்கையில் ஒரு வயது சிறுவன் ஒருவன் குண்டு பாய்ந்து இறந்துகிடந்துள்ளான்.

அவன், பொலிசார் சுட்டதால் இறந்தானா, அல்லது ஏற்கனவே கொல்லப்பட்டிருந்தானா என்ற விடயம் உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும்.

காயமடைந்த அந்த 33 வயது நபரும், பொலிசார் ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகனை தந்தை கடத்த முயன்றதாக கூறப்படும் இந்த சம்பவத்தில், பொலிசாருக்கும் அவனது தந்தைக்கும் நடந்த மோதலில், அந்த அப்பாவி சிறுவன் உயிரிழந்துள்ள விடயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்