இலங்கை வம்சாவளியினரான நகைச்சுவையாளர் கனடாவில் சந்தித்த வேடிக்கை அனுபவம்

Report Print Balamanuvelan in கனடா

கனேடிய நகைச்சுவையாளரும் எழுத்தாளருமான ஒருவரின் புத்தகம் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.

Halifaxஐச் சேர்ந்த அந்த எழுத்தாளரின் பெயர் Pardis Parker. Parkerஇன் தாய் ஒரு இலங்கை வம்சாவளியினர், தந்தை ஈரான் வம்சாவளியினர்.

தனது தந்தையின் கலாச்சாரத்துடன் இணைந்த ஒரு வேடிக்கையான நிகழ்வின் அடிப்படையில் Parkerஇன் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

அந்த புத்தகத்தின் பெயர் Illegal Milk, அதாவது சட்டவிரோத பால்... ஈரானில் தயிர் தயாரிப்பதற்காக, கறந்த பாலை அப்படியே பயன்படுத்துவார்களாம், அதாவது பதப்படுத்தலுக்கு செல்வதற்கு முன்பே! ஆனால், இதில் ஒரு பிரச்சினை உள்ளது, அது என்னவென்றால், கறந்த பாலை அப்படியே பயன்படுத்துவது கனடாவில் சட்டவிரோதம்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், Parkerஇன் தாத்தாவுக்கோ கறந்த பால் வேண்டும், ஆனால், விவசாயிகளால் கறந்த பாலை அப்படியே விற்க முடியாது.

Submitted by Pardis Parker

ஆகவே, விவசாயிகள் சிலர் Parkerஇன் தாத்தாவுடன் சேர்ந்து ஒரு திட்டம் போட்டார்களாம். அதாவது, அந்த விவசாயிகள், பண்ணையின் பின் பக்கம் ஒரு பாத்திரத்தில் பாலை வைத்து விடுவார்கள். Parkerஇன் தாத்தா நேரடியாக சென்று அந்த பாலை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை அங்கு வைத்துவிட்டு வந்துவிடவேண்டும், இதுதான் அந்த திட்டம்.

அதாவது, அவர்கள் நேரடியாக இவருக்கு பாலை விற்கவில்லையாம், இவரே எடுத்துக்கொள்ளுகிறாராம்.

இப்படியே விடயம் நடந்துகொண்டிருந்த நிலையில், ஒரு நாள், Parkerஇன் தாத்தாவும் Parkerம் பாலை எடுக்க செல்லும்போது, பாலின் உரிமையாளர் அங்கு வந்துவிட்டாராம். ஆறு வயதே ஆன சிறுவனான Parker பயத்தில் நடுங்கிப்போனாராம். காரணம், இப்போது Parkerஇன் தாத்தா பால் எடுப்பதை அந்த விவசாயி பார்த்துவிட்டார்.

இந்த சம்பவத்திற்கு Parkerம் ஒரு சாட்சி! அந்த வயதில் தான் அனுபவித்த பயத்தை இப்போது நினைவுகூறும் Parker ஏற்கனவே ஒரு நகைச்சுவையாளரும் என்பதால், அந்த சம்பவத்தின் அடிப்படையில்தான் இந்த புத்தகத்தை வேடிக்கையாக எழுதியுள்ளாராம்.

Submitted by Pardis Parker

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்