கனடாவில் நள்ளிரவு 1 மணிக்கு வீட்டிலிருந்து காணாமல் போன 14 வயது சிறுமி! அவர் புகைப்படத்துடன் பின்னணி தகவல்

Report Print Raju Raju in கனடா
260Shares

கனடாவில் நள்ளிரவில் 14 வயது சிறுமி காணாமல் போயுள்ளார்.

Manitoba-வை சேர்ந்தவர் Ashlyn Stobbe (14).

இவர் கடந்த செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் கடைசியாக நள்ளிரவு 1 மணியளவில் காணப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் வீட்டிலிருந்து Ashlyn Stobbe மாயமாகியுள்ளார். இந்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

காணாமல் போன Ashlyn Stobbeன் உயரம் 5 அடி 5 அங்குலம் எனவும் அவர் 160 பவுண்டுகள் எடை கொண்டவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

பொலிசாரும், Ashlyn Stobbeன் குடும்பத்தாரும் அவரின் நிலை குறித்து கவலையும், அக்கறையும் கொண்டுள்ளனர்.

Ashlyn Stobbe குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் உடனடியாக தெரிவிக்கலாம் என பொலிசார் தொலைபேசி எண்களை கொடுத்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்