கனடாவில் சரமாரி கத்திகுத்து தாக்குதலில் உயிரிழந்த பெண்! கையில் கத்தியுடன் சம்பவ இடத்தில் நின்றிருந்த ஆண் கைது

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பெண்ணொருர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ரொரன்ரோவின் Lawrence and Victoria Park avenues அருகில் தான் இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது.

40களில் உள்ள பெண்ணொருவர் சரமாரியாக கத்திகுத்து பட்ட காயத்துடன் உயிருக்கு போராடி வந்திருக்கிறார்.

பின்னர் அங்கு வந்த அவசர உதவி குழுவினர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் பெண் கத்திகுத்து பட்டு கிடந்த இடத்தில் கையில் கத்தியுடன் நின்றிருந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த கொலை தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்