சரியாக செயல்படாத நுரையீரல், இதயத்தில் இரண்டு ஓட்டைகள்: 1800 கிலோமீற்றர் பயணித்தும் காத்திருந்த இளம்பெண்

Report Print Balamanuvelan in கனடா
572Shares

சரியாக செயல்படாத நுரையீரல், வழக்கமான அளவை விட பெரிய இதயம், அந்த இதயத்தில் இரண்டு ஓட்டைகள் என அவதிப்பட்டுவந்த இளம்பெண் ஒருவர், 1800 கிலோமீற்றர் பயணித்து அறுவை சிகிச்சைக்காக ரொரன்றோவுக்கு சென்றார். ஹாலிபாக்சைச் சேர்ந்தவர் Tahlia Ali (16).

அவருக்கான அறுவை சிகிச்சைக்கேற்ற வசதியுடைய மருத்துவமனை ரொரன்றோவில்தான் உள்ளது என்பதால், 1800 கிலோமீற்றர் கேரவன் ஒன்றில் பயணித்து அங்குள்ள ஹொட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தது Tahliaவின் குடும்பம்.

நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான ஒப்புதல் பிப்ரவரி மாதத்திலேயே கிடைத்துவிட்டாலும், கொரோனா பரவல் காரணத்தாலும், ரொரன்றோவில் அறுவை சிகிச்சைக்காக வருவோர் தங்கும் இடத்தில் அறைகள் இல்லாததாலும் தங்கள் பயணத்தை ஒத்திப்போட்ட Tahliaவின் குடும்பம், பின்னர் மருத்துவர்கள் அழைப்பின் பேரில் மே மாதம் அங்கு சென்ரது.

என்றாலும், ஆறு மாதங்கள் காத்திருந்தபின்பு, இப்போதுதான் Tahliaவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

Provided by The Canadian Press

அறுவை சிகிச்சை தொடங்கிய பின்னர், அவரது நுரையீரலை மாற்றுவதைவிட, Tahliaவின் இதயத்திலுள்ள ஓட்டைகளை அடைப்பதுதான் மருத்துவர்களுக்கு சவாலாக இருந்ததாம். இரண்டு அறுவை சிகிச்சைகளும் ஒரே நேரத்தில் நடந்தும், 13 மணி நேரம் அறுவை சிகிச்சைகளுக்கு தேவைப்பட்டதாம்.

கடந்த வெள்ளிக்கிழமைதான் Tahliaவுக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் அகற்றப்பட்டு, அவர் தானே சுவாசிக்கத் தொடங்கியுள்ளார்.

அவர் வீடு திரும்ப இன்னும் நான்கு மாதங்களாவது ஆகும். இதில் அறுவை சிகிச்சைக்கு ஒரு பக்கம், ஹொட்டலில் அறை எடுத்து தங்குவது மறுபக்கம் என Tahliaவின் குடும்பம் பெரும் செலவை எதிர்கொள்ளவேண்டியிருந்திருக்கிறது.

இதற்கிடையில், பல நாடுகளில் கொரோனா காரணமாக மற்ற அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது கனேடிய மருத்துவமனைகள் Tahlia போன்றவர்களுக்காக மீண்டும் அறுவை சிகிச்சைகளை தொடங்கியுள்ளன.

ஆனால், உறுப்புகள் கிடைப்பது அரிதாக உள்ளதாக கூறும் Dr. Shaf Keshavjee, Tahliaவின் மருத்துவர், கனேடியர்கள் உறுப்பு தானத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்