கனடாவில் Ottawa பகுதியில் வானிலிருந்து விண்கல் (meteor)ஒன்று விழும் அபூர்வ காட்சி ஒன்று கமெராவில் சிக்கியுள்ளது.
Western பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் துறை, அந்த வீடியோவில் காணப்படுவது விண்கல்தான் என்பதை உறுதி செய்துள்ளது.
NASAவும், நவம்பர் மாதத்தின் மத்தியில், ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற நிகழ்வு நிகழ்வதுண்டு என்று கூறியுள்ளது.
அமெரிக்க விண்கல் அமைப்பும், வானிலிருந்து விண்கல் விழுவதை கனடாவிலும் அமெரிக்காவிலும் பலர் பார்த்தாக தங்களுக்கு செய்திகள் பல வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.