லாஸ்லியா தந்தை மரியநேசன் மரணம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவலை யாரும் பரப்ப வேண்டாம் என அவரின் மச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கனடாவில் வசிக்கும் மரியநேசன் கடந்த வாரம் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஆனால் மரணம் தொடர்பில் பல்வேறு விதமான தகவல்கள் சமூகவலைதளத்தில் பரவின.
இது குறித்து பேசிய கனடாவில் வசிக்கும் மரியநேசனின் மச்சான் மயூரன் கூறுகையில், மரியநேசன் என்னுடைய மச்சான் ஆவார்.
அவர் வீட்டில் இருந்து என் வீடு மிக அருகில் தான் உள்ளது.
கடந்த 14ஆம் திகதி நான் மரியநேசனுடன் பேசினேன், அடுத்தநாள் 15ஆம் திகதி ஞாயிறு அன்று அவர் வீட்டின் அருகில் இருப்பவர்கள் எனக்கு போன் செய்து அழைத்தனர். நான் அங்கு போன போது மருத்துவர்கள் மற்றும் பொலிசார் இருந்தனர்.
#LosliyaMariyanesan #Losliya
— அழகிய தமிழ் மகள் இவள் மைனம்மாவின் பிரி (@losliyasiss) November 19, 2020
சமூகவலைத்தளங்களும்
சாத்தான்களும் pic.twitter.com/Ss1iQGiX1y
நான் அவர் உறவினர் என்ற அடிப்படையிலேயே என்னை அழைத்தனர். பின்னர் அவர் இயற்கையான முறையில் இறந்தார் என உறுதி செய்தனர்.
மேலும் மரியநேசனின் ஆவணங்களை என்னிடம் ஒப்படைத்தனர். அவர் உடலை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம்.
கொரோனா காலம் என்பதால் 1 அல்லது 2 வாரம் அதற்கு ஆகலாம்.
சமூகவலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் உலா வருகிறது, அதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.