காதலிப்பது போல் நடித்து மோசடி செய்துவிட்டதாக இளம்பெண் மீது புகார்: நீதிபதி வழங்கிய அதிரடி தீர்ப்பு

Report Print Balamanuvelan in கனடா
222Shares

இளம்பெண் ஒருவர் தன்னை காதலிப்பது போல் நடித்து மோசடி செய்துவிட்டதாக கனேடியரால் தொடரப்பட்ட வழக்கில், அவர் கற்பனை உலகில் சஞ்சரிப்பதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார் நீதிபதி.

கனடாவில் வான்கூவரில் சட்டத்தில் பட்டம் பெற்றவர் Dongdong Huang (62). Peipei Li (35) என்ற பெண் தன்னைக் காதலிப்பதாக எண்ணி ஒரு மில்லியன் டொலர் பணத்தையும் பரிசுகளையும் மழையாக பொழிந்துள்ளார் Huang.

ஆனால், Peipei வேறொருவரை திருமணம் செய்துகொள்ளவே, ஏமாற்றம் அடைந்த Huang, Peipei தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் நம்பவைத்து மோசடி செய்துவிட்டதாக Peipei மீது வழக்குத் தொடர்ந்தார்.

ஆனால், இருவருக்கும் இடையிலான குறுஞ்செய்திகளை பார்வையிடும்போது, நான் உங்களுடன் எப்போதுமே இருக்கமாட்டேன் என்பதை தெளிவாக தெரிவித்துள்ளேன், எனக்கு, நீங்கள் ஒரு அண்ணன், ஒரு அப்பா அல்லது மூத்த அண்ணன் போல என்று தெரிவித்துள்ளார் Peipei.

Peipeiயுடன் இருக்கும்போது Huang எடுத்த புகைப்படங்களில் பெரும்பாலானவற்றில், Peipei கையில் நிச்சயதார்த்த மோதிரம் இருப்பதை தெளிவாகவே காண முடிகிறது. ஆனால், அதை தான் கவனிக்கவில்லை என்கிறார் Huang.

தீவிர விசாரணைக்குப்பின் தீர்ப்பளித்த நீதிபதி, Peipei தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியதாக Huang தெரிவித்துள்ளது எதுவுமே உண்மையில்லை, அவர் வெறும் கற்பனையில், தன்னைவிட மிகவும் வயது குறைந்த Peipei மீதான ஆசையில், நடக்காததை நடந்ததாக நம்பிக்கொண்டிருக்கிறார்.

ஆனால், Peipei தன் நிலையை தெளிவாக அவரிடம் தெரிவித்துள்ளார். அவருக்கு Huangஐ ஏமாற்றும் எண்ணம் எதுவும் இல்லை.

ஆனால் Peipei சொன்னதை Huang ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, Peipei வீட்டில் பழுதுபார்ப்பதற்காக Huang செலவிட்ட 2,280 டொலர்களை Peipei திருப்பிக் கொடுக்கவேண்டும் என்றும், Huang வைத்திருந்த Peipeiக்கு கொடுக்கப்படவேண்டிய 1,000 டொலர்களை அவர் Peipeiக்கு கொடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்