கனடாவில் சேற்று குழிக்குள் சிக்கிய 680 கிலோ எடை கொண்ட குதிரை ஒன்று பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கனடாவின் Edmontonல் உள்ள குழிக்குள் தான் குதிரையானது சிக்கி கொண்டது.
Fysik என்ற பெயர் கொண்ட அந்த 11 வயது குதிரை எதிர்பாராதவிதமாக சேற்றுப் பள்ளத்தில் தவறி விழுந்து விட்டது.
இதனை அடுத்து அதன் உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் குதிரையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆரம்பத்தில் குதிரையை மீட்பது கஷ்டம் என்று கூறப்பட்டது.
பின்னர் பல லொறிகளை கொண்டு வந்து நிறுத்தி அதில் கயிறுகளை கட்டி அதன் மூலம் சேற்றில் சிக்கிய குதிரை அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டது.
இது குறித்து குதிரையின் உரிமையாளர் கூறுகையில், குதிரையை நான் இழந்துவிடுவேன் என்றே நினைத்தேன், அது உயிர் பிழைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.
குதிரையை காப்பாற்ற உதவியவர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.