இலங்கை பெண் உட்பட 10 பேரை வேன் மோதி கொன்ற நபரை நேருக்கு நேர் பார்த்த பெண்: என்ன சொல்கிறார் தெரியுமா?

Report Print Balamanuvelan in கனடா
1048Shares

கனடாவில் மக்கள் கூட்டத்தின்மீது வேன் ஒன்றைக்கொண்டு மோதி, இலங்கைப் பெண் உட்பட 10 பேர் உயிரிழக்கவும், 16 பேர் படுகாயமடையவும் காரணமாக இருந்த கொலைகாரனை நேருக்கு நேர் பார்த்த பெண் ஒருவர் தன் திகில் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.

2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி, ரொரன்றோவில் பாதசாரிகள் கூட்டத்துக்குள் வேன் ஒன்றை செலுத்தி, நிற்காமல் வேகமாக சென்ற Alek Minassian (28) என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

இந்த கோர சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டார்கள், பலர் படுகாயமடைந்தார்கள், மூளை பாதிக்கப்பட்டவர்களும் கால்களை இழந்தவர்களும் அதில் அடக்கம்.

அவர் மீது 10 கொலைக்குற்றச்சாட்டுகள் மற்றும் 16 கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

விசாரணையில், Minassian, Incel என்ற ஒன்லைன் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், காதலிக்கவும், பாலுறவு கொள்ளவும் பெண் கிடைக்காததால், பெண்கள் மீதும் பாலுறவு கொள்பவர்கள் மீதும் வெறுப்புற்று, அவர்களை கொலை செய்யும் எண்ணம் கொண்டவர்கள் ஆவர்.

இந்த கோர சம்பவத்தில் 22 முதல் 94 வயது வரையுள்ள எட்டு பெண்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களில் இலங்கையரான Renuka Amarasinghaவும் ஒருவர்.

இதற்கிடையில், Minassian இந்த குற்றச்செயலுக்கு தான் பொறுப்பல்ல, தனது மன நல பிரச்சினைதான் நடந்த சம்பவத்திற்கு காரணம் என வாதிட இருக்கிறான்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள Minassianஇடம், 10 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 16 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள், இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது நான் எனது கடமையை நிறைவேற்றியதுபோல் உணர்கிறேன் என்று கூறினான்.

இந்த தகவல் வெளியானதும், அவன் கூறியதைக் கேட்டு தான் மிகவும் பயந்ததாக தெரிவிக்கிறார் Dina Risin (82) என்ற பெண்.

நான் எனது மகளுக்காகவும், பேத்திக்காகவும் கூட பயப்படுகிறேன் என்று கூறும் Dina, அந்த நபர் தனி ஆள் இல்லை, அவனைபோலவே எண்ணம் கொண்ட இன்னும் பலர் சமுதாயத்தில் இருக்கலாம் என்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் Dina கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, தன்னை நோக்கி நடைபாதையில் ஒரு வேன் வருவதைக் கவனித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்