ஓலை வீட்டில் வசித்த லாஸ்லியா தந்தை! கஷ்டங்களுக்கு மத்தியில் குடும்பத்தை காப்பாற்ற செய்த செயல்.. நெகிழ்ச்சி ப்ளாஸ்பேக்

Report Print Raju Raju in கனடா
9139Shares

ஈழப்பெண்ணான பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் மாரடைப்பால் மரணமடைந்த தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மரியநேசன் என்பவர் யார்?

இலங்கையின் கிளிநொச்சியில் மரியநேசன்- மேரி மாக்ரட்டின் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர், 1996ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி லொஸ்லியா பிறந்தார்.

யுத்த சூழ்நிலையின் காரணமாக திருகோணமலை மாவட்டத்திற்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்துள்ளனர்.

அங்கு அன்புவெளிப்புரம் பகுதியில் ஓலைகளானாலான வீடொன்றைக் கட்டி வாழ்ந்து வந்துள்ளனர்.

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில், மரியநேசன் அவர்கள் ஓட்டுநராக பணியாற்றி குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.

இப்படியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்க, 2009ம் ஆண்டு காலப்பகுதியில் தொழில் வாய்ப்பை தேடி கனடாவுக்கு சென்றுள்ளார்.

அதன்பின்னர் லொஸ்லியா மற்றும் அவரது சகோதரிகள் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த சூழலில் தான் மரியநேசனின் மரண செய்தி பலருக்கும் பேரிடியாக வந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்