தன் மகளை கோடீஸ்வரர் ஒருவருக்குத்தான் மணம் செய்துகொடுக்க விரும்பியிருந்ததாக கனேடியர் ஒருவர் கூறியிருந்தார்.
அவரது கனவு பல ஆண்டுகளுக்குப் பின் நிறைவேறியுள்ளது. எட்மண்டனைச் சேர்ந்த Andrew Burke (63), வெளியே சென்றிருந்த மனைவி Christineஇடம், வீட்டுக்கு வரும்போது சாப்பிட ஏதாவது வாங்கி வருமாறு கேட்டுக்கொண்டார்.
வீடு திரும்பிய மனைவியிடம், உன்னிடம் ஒரு விடயம் சொல்லவேண்டும் என்று கூற, உடனே, கணவர் வேலையை விட்டுவிட்டார் போலிருக்கிறதே என்ற எண்ணம்தான் தோன்றியிருக்கிறது.
ஆனால், Andrew சொன்ன விடயம் வேறு... நமது திருமணத்தன்று உன் தந்தை உரையாற்றும்போது ஒரு விடயம் சொன்னார் ஞாபகமிருக்கிறதா? என் மகளை ஒரு கோடீஸ்வரனுக்குத்தான் திருமணம் செய்துகொடுக்கவேண்டும் என்றிருந்தேன் என்று கூறினாரே... அதைவிட ஒரு படி மேலே போய், கோடீஸ்வரனைப்போல செலவு செய்யும் ஒரு நபராகியிருக்கிறேன் நான் என்றார் Andrew.

முதலில் மனைவி நம்பவும் இல்லை, அவருக்கு புரியவும் இல்லை, அப்புறம்தான் தனக்கு லொட்டரியில் பரிசு விழுந்துள்ள விடயத்தைக் கூறினார் Andrew.
நடந்தது என்னவென்றால், Andrew லொட்டரி டிக்கெட் வாங்கியிருந்தார், வழக்கமாக லொட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் அவருக்கு உண்டு என்றாலும், இம்முறை இரண்டு டிக்கெட்கள் வாங்கியிருந்தார் அவர்.
மாமனார் ஆசைப்பட்டபடி அவரை கோடீஸ்வரனாக்கியே தீருவது என விதி கங்கணம் கட்டிக்கொண்டதோ என்னவோ, அவர் வாங்கிய இரண்டு டிக்கெட்களுக்கும் பரிசு விழுந்திருந்தது.
ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 2.5 மில்லியன் டொலர்கள்! ஆக, ஒரே நாளில் 5 மில்லியன் டொலர்களுக்கு அதிபதியாகிவிட்டார் Andrew, அதாவது கோடீஸ்வரர் ஆகிவிட்டார்.
நிறைய வேலை இருக்கிறது, வீட்டை ரிப்பேர் செய்யவேண்டும், மீதமுள்ள வாழ்க்கையை வசதியாக வாழவேண்டும் என்கிறார் Andrew.