நள்ளிரவில் ஒலித்த எச்சரிக்கை அலாரம்! தீயணைப்பு வீரர்கள் கவனக்குறைவால்... கனடாவில் நடந்த துயரம்!

Report Print Balamanuvelan in கனடா
443Shares

கனடா இல்லம் ஒன்றில் தீப்பற்றியதால் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டுக்குள் ஒரு பெண்மணி இருப்பதை கவனிக்காமலே சென்றுவிட்டதாகவும், அதனால் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

ரொரன்றோவில் வசித்துவரும் தன் தாய் Elaine Emile (95), தீ விபத்து ஒன்றில் இறந்துவிட்டதாக அவரது மகள் Yvette Galisheff (65)க்கு அவரது சகோதரி தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊடகங்களுக்கு பேட்டியளித்த தீயணைப்புத்துறை, ரொரன்றோவிலுள்ள இல்லம் ஒன்றில் தீப்பிடித்துவிட்டதாக தங்களுக்கு காலை 8 மணியளவில் தகவல் வந்ததாகவும், தாங்கள் சென்று பார்க்கும்போது தீ அணைந்திருந்ததாகவும், ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்கள்.

ஆனால், உண்மையில் வேறொரு சம்பவம் நடந்துள்ளது! கனடாவின் ரொரன்றோவிலுள்ள இல்லம் ஒன்றில் தீப்பற்றியதையடுத்து இரவு 2 மணியளவில் அங்கு எச்சரிக்கை அலாரம் ஒலித்துள்ளது.

Submitted by Nadya Galisheff

அதைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், வீட்டை சோதனையிட்டுவிட்டு திரும்பிச் சென்றுள்ளனர்.

ஆனால், அந்த வீட்டுக்குள் ஒரு பெண்மணி இருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை! இந்த விடயத்தை பெயர் வெளியிட்டால் பிரச்சினை வரும் என்று பயந்து, பெயரைக் குறிப்பிடாமல், Emileயின் வீட்டின் அருகில் வாழும் ஒரு பெண் Yvetteஇடம் கூறியுள்ளார்.

அத்துடன், Emileயின் உடற்கூறு ஆய்விலும், அவர் நள்ளிரவில் உயிரிழந்துள்ளதாகவும், அவரது உயிரிழப்பிற்கு காரணம் தீதான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீயணைப்புத்துறையினரின் கவனக்குறைவால் தன் தாய் பயங்கரமான மரணத்தை சந்தித்துள்ளார் என்பதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை என்று கூறும் Yvette, அவர்கள் தங்கள் தவறுக்கு வருத்தம் தெரிவிக்கவாவது வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கிறார்.

நாங்கள் தவறு செய்துவிட்டோம், வருந்துகிறோம், இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம் என்றாவது கூறமாட்டார்களா என்று எதிர்பார்த்திருப்பதாகதெரிவிக்கிறார்.

தன் தாய் உயிரிழந்ததுபோல் இன்னொரு முதியவர் அல்லது பெண்மணிக்கு இனி நேரிடக்கூடாது என தான் விரும்புவதாக தெரிவிக்கிறார் அவர்.இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை அதிகாரி விசாரணை ஒன்றை துவக்கியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்