புதிய வாழ்வை துவக்குவதற்காக கனடா புறப்பட்ட இந்திய தம்பதிக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றம்

Report Print Balamanuvelan in கனடா

கனடா சென்று புதிய வாழ்வைத் துவங்கும் கனவிலிருந்த இந்தியத் தம்பதியருக்கு தொல்லையாக வந்தது இந்த பாழாய்ப்போன கொரோனா!

பயணம் புறப்படுவதற்காக பெட்டி படுக்கைகளுடன் தயாராக இருக்கிறார் ஹர்லீன் கவுர், ஆனால் எப்போது புறப்படுவது என்றுதான் தெரியவில்லை.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கனேடிய அரசு ஹர்லீனுக்கு நிரந்தர வாழிட உரிமம் தயாராக இருப்பதாக தகவல் தெரிவித்தது. உடனே தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிலிருந்து ரொரன்றோவுக்கு புறப்படத்தயாரானார் அவர்.

ஏப்ரல் மாத துவக்கத்தில் கனடாவுக்கு புறப்படுவதற்காக டிக்கெட்களை முன் பதிவு செய்தனர் ஹர்லீன் குடும்பத்தினர். அப்போதுதான் தொல்லையாக குறுக்கே வந்தது இந்த கொரோனா... அனைத்து சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

globalnews

ஹர்லீன் குடும்பத்திற்கு கனடா புலம்பெயர் அதிகாரிகள் கொடுத்திருந்த பயண ஆவணங்கள் ஏப்ரல் 27உடன் காலாவதியாகின.

இப்போது ஆறு மாதங்களுக்குப்பிறகு விமான சேவை தொடங்கினாலும், அவர்களது பயண ஆவணங்களை கனடா புதுப்பிக்காததால் கனடாவுக்கு புறப்பட இயலாத நிலையிலிருக்கிறது ஹர்லீன் குடும்பம்.

எப்போது அவை புதுப்பிக்கப்படும் என்பது குறித்த தெளிவான தகவலையும் கனடா அதிகாரிகள் கொடுக்கவில்லை.

எனவே ஹர்லீனைப்போலவே ஆயிரக்கணக்கானோர் என்ன செய்வதென தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கின்றனர்.

நம்பிக்கை இழந்துவிட்டோம், கனடா செல்லும் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டோம் என்கிறார் ஹர்லீன்.

கனடாவோ கொஞ்சம் கொஞ்சமாகத்தான், சுமார் 300 ஆவணங்கள் வரையே, புதுப்பித்திருப்பதால், மற்றவர்கள் நிலைமை இப்போதைக்கு தெளிவற்றதாகவே உள்ளது.

வீடியோவை காண

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்