கனடாவில் அவசர தேவையை முன்னிட்டு ஆம்புலன்ஸ் சேவையை பெற பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் இருப்பதாக நோவா ஸ்கொட்டியாவில் உள்ள இரண்டு தீவுகளில் வசிக்கும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
டிக்பியிலிருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பிரையர் தீவு மற்றும் லாங் தீவில் வசிப்பவர்களே தற்போது, தங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையில் மாற்றங்களைக் காண விரும்புவதாக தெரிவித்துள்ளவர்கள்.
பிரையர் தீவு மற்றும் லாங் தீவில் நிறுத்தப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனமானது அடிக்கடி வேறு அவசர உதவிகளுக்கு பயன்படுத்தப்படுவதால், தீவு வாசிகளுக்கு அதன் சேவையை தேவையான தருணங்களில் பயன்படுத்த முடியாமல் போவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆனால் கனடாவின் சுகாதார அமைச்சகம், இந்த குற்றச்சாட்டை மறுத்ததுடன், குறித்த தீவுகளில் உள்ள ஆம்புலன்ஸ் சேவைக்கு எவ்வித மாறுதலும் கொண்டுவரவில்லை என தெரிவித்துள்ளார்.