கனடாவில் முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்ட அணை: மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Report Print Balamanuvelan in கனடா
432Shares

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் முன்னறிவிப்பின்றி அணை ஒன்று திறக்கப்பட்டதால் ஐந்து பேர் வெள்ளத்தில் சிக்கினார்கள்.

நேற்று முன் தினம் சிலர் வட வான்கூவரிலுள்ள கேப்பில்லானோ நதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது, எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென அணை திறக்கப்பட்டதையடுத்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதனால் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஐந்து பேரும் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார்கள்.

அவர்களில் நான்கு பேர் மீட்கப்பட்டுவிட்ட நிலையில், ஒருவரை மட்டும் காணவில்லை. சிறிது நேரத்திற்குப்பின் அவர் தண்ணீரிலிருந்து மீட்கப்பட்டாலும், பின்னர் அவர் உயிரிழந்துவிட்டார்.

க்ளீவ்லாண்ட் அணையில் பராமரிப்புப் பணி நடந்துகொண்டிருந்ததாகவும், திடீரென அணை திறந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறியதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த அணையின் தண்ணீர் மட்டத்தைப் பொருத்து, அது அவ்வப்போது திறந்துவிடப்பட்டு தண்ணீரின் அளவு குறைக்கப்படுமாம்.

அது சில நேரங்களில் தானியங்கி முறைகளிலும் சில நேரங்களில் மனிதர்களாலும் கட்டுப்படுத்தப்படுமாம்.

ஆனால், இந்த விபத்து நடந்தபோது எப்படி தண்ணீர் வெளியேறியது என தெரியவில்லை. பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்