கனேடிய பிரதமருடன் தொடர்பா?: முதன்முறையாக மவுனம் கலைக்கும் நடிகை

Report Print Balamanuvelan in கனடா

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் நடிகை ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்த செய்தி குறித்து முதன்முறையாக மவுனம் கலைத்துள்ளார் அந்த நடிகை.

அவரது பெயர் Magalie Lépine-Blondeau (38). பலர் மனதிலும் ஒலித்துக்கொண்டிருந்த, கியூபெக்கைச் சேர்ந்த Magalieக்கும், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்வியை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தும் ஒருவரே அவரிடம் நேரடியாக கேட்டுவிட்டார்.

தான் இது போன்ற வதந்திகளுக்கு பொதுவாக பதிலளிப்பதில்லை என்று கூறிய Magalie, இருந்தாலும் இதற்கு மேல் இதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றார்.

அது தவறான தகவல் என்றும், அந்த வதந்தியைக் கேட்டு கேட்டு நான் களைத்துப்போனேன் என்றும் கூறினார் அவர்.

முதலில் அவர் கனடாவின் பிரதமர், அவரை கண்ட இடங்களில் சந்திக்கமுடியுமா என்று கேட்ட Magalie, ஏற்கனவே கொரோனா ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், யாரையாவது சென்று சந்திக்க முடியுமா என்கிறார். அப்படியானால் பிரச்சினை முடிந்தது என்றார் அவரை பேட்டி கண்டவர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்