கனடாவில் காணாமல் போயுள்ள இலங்கை தமிழ் இளைஞன்! புகைப்படத்துடன் வெளிவந்த பின்னணி தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் இலங்கை தமிழ் இளைஞன் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான தகவலை ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி சஜந்தன் ஜெயநாதன் என்ற 27 வயது இளைஞன் செப்டம்பர் 29ஆம் திகதி Queen St W & Ossington Ave பகுதியில் கடைசியாக காணப்பட்டுள்ளார்.

5 அடி 10 அங்குலம் உயரம் கொண்ட சஜந்தனின் தலை முடி நிறம் பழுப்பு நிறம் என கூறப்பட்டுள்ளது.

காணாமல் போன அன்று சஜந்தன் கருப்பு நிற சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்தார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவரை யாரேனும் பார்த்தால் அருகில் சென்று அணுக வேண்டாம் எனவும் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்