தப்பிக்கொண்டே வந்த கொலைக்குற்றவாளி... கொரோனா குறுக்கே வந்தும் நீதியை நிலைநாட்டிய நீதிமன்றம்

Report Print Balamanuvelan in கனடா

ஆதரவற்றோர் இல்லம் ஒன்றை நடத்திவந்த மேலாளர் ஒருவரை இளைஞர் ஒருவர் குத்திக் கொலைசெய்தார்.

2018ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 17ஆம் திகதி Ricardo Hibi (34) என்ற அந்த ஆதரவற்றோர் இல்ல மேலாளரை Kane Moar (23)என்பவர் கத்தியால் குத்திக் கொலைசெய்தார்.

ஜூலையில் அந்த வழக்கு விசாரணைக்கு வரவேண்டியது. ஆனால், கொரோனா நேரத்தில் எப்படி நீதிமன்றத்தை நடத்துவது என்ற குழப்பத்தால் அது தள்ளிப்போயிற்று.

மீண்டும் இம்மாதம் Kane Moar விசாரணைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், மீண்டும் வழக்கு விசாரணை தள்ளிப்போனது.

அதற்கு காரணம் கொரோனா... நீதிபதிகள் குழுவில் ஒருவருக்கு கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அவருடன் குழுவில் இருக்கும் 11 நீதிபதிகளும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதற்காக வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள்.

ஆனால், பொது சுகாதாரத்துறை, அந்த ஒரு நீதிபதிக்கு கொரோனா இருப்பதாக தெரியவந்தால்கூட மற்றவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

சமூக இடைவெளி முதலான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நீதிமன்ற பணிகள் தொடரலாம் என ஆலோசனை கூறியுள்ளது.

அதைத் தொடர்ந்து கூடிய நீதிமன்றம், Kane Moar கொலைக்குற்றவாளி என தீர்ப்பளித்தது.

உடல் நலமின்றி வீடு திரும்பியுள்ள ஒரு நீதிபதி தவிர மற்ற 11 நீதிபதிகளும் கூடி இந்த முடிவை எடுத்தனர்.

இதனால் சுமார் இரண்டு ஆண்டுகள் தப்பிக்கொண்டே வந்த Kane Moar தண்டனைக்குட்படுத்தப்பட உள்ளார்.

தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள், ஆனால் Ricardo Hibi விடயத்தில் நீதி தமாதமானாலும், நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்