கனடாவில் கேபிள்களை வெட்டிய மர்ம நபர்: 300 மீற்றர் உயரத்திலிருந்து விழுந்து நொறுங்கிய கேபிள் கார்கள்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் கேபிள் கார் பயணத்துக்கு பெயர் பெற்ற சுற்றுலாத்தலம் ஒன்றில், கேபிள் கார்கள் செல்லும் கேபிளை மர்ம நபர்கள் அறுத்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் Sea-to-Sky Gondola என்ற இடத்தில் கேபிள் கார் மூலம் பயணிக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலாத்தலத்துக்கு ஆண்டொன்றிற்கு 400,000 சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதுண்டு. அப்படிப்பட்ட புகழ்பெற்ற இந்த சுற்றுலாத்தலத்தில் அமைக்கப்பட்டுள்ள கேபிள் கார் செல்வதற்கான கேபிள்களை மர்ம நபர்கள் அறுத்துள்ளனர்.

இதனால், அந்த கேபிளில் இணைக்கப்பட்டிருந்த கேபிள் கார்கள் பல, திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில், 300 மீற்றர் உயரத்திலிருந்து கீழே விழுந்து சேதமடைந்துள்ளன.

நல்ல வேலையாக, அதிகாலை நேரம் என்பதால், சுற்றுப்பயணிகள் யாரும் இல்லாததால் இந்த விபத்தில் யாரும் சிக்கவில்லை.

ஒரு பக்கம் இந்த சுற்றுலாத்தலம் புகழ்பெற்றது என்றாலும், அதே நேரத்தில், இந்த கேபிள் திட்டத்திற்கு உள்ளூர் மக்கள் பலர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

அதிக சுற்றுலாப்பயணிகள் வரத்தொடங்கினால் அப்பகுதியிலுள்ள இயற்கைச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என அவர்கள் கருதியதால், அவர்கள் அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள்.

கனேடிய பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு தொடுத்து கேபிளை வெட்டிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்