கனடாவின் மிகப்பெரிய கல்லறையில் சிதறிக்கிடந்த எலும்புகள்: பின்னணியிலிருந்தது யார் தெரியுமா?

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் மிகப்பெரிய கல்லறை ஒன்றில் ஆங்காங்கு மனித எலும்புகளும், சவப்பெட்டுத்துண்டுகளும் சிதறிக்கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெளிநாடுகளில் இறந்த உடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதையும், இறந்த உடலை யாராவது தொந்தரவு செய்தால் அவர்களுக்கு தண்டனை உண்டு என்பதையும் பலரும் அறிந்திருக்கலாம்.

அப்படிப்பட்ட சூழலில், கனடாவின் மிகப்பெரிய கல்லறையான மொன்றியலில் அமைந்துள்ள கல்லறையில், ஆங்காங்கு மனித எலும்புகளும், சவப்பெட்டியின் துண்டுகளும் சிதறிக்கிடந்துள்ளன.

ஆனால், இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்தபோது, குற்றவாளியை ஒன்றும் செய்ய முடியவில்லை.

காரணம், எலும்புகளையும் சவப்பெட்டிகளையும் சேதப்படுத்தியது groundhogs என்ற அணில் இனத்தைச் சேர்ந்த விலங்குகள்.

இந்த விலங்குகளின் பற்கள் வேகமாக வளர்ந்துகொண்டே இருக்கும் என்பதால், அந்த பற்களின் நீளத்தைக் குறைப்பதற்காக, அந்த விலங்குகள் எதையாவது கொறித்துக்கொண்டே இருக்கும்.

அப்படித்தான் அவை இந்த சவப்பெட்டிகளையும், எலும்புக்கூடுகளையும் கடித்துள்ளன. அதனால்தான், எலும்புகளும் சவப்பெட்டித் துண்டுகளும் கல்லறை முழுவதும் சிதறிக் கிடந்துள்ளன.

ஆனால், கனடாவில், groundhogs எனப்படும் இந்த விலங்குகளைக் கொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, ஆகவே, அவற்றைக் கொல்லவும் முடியாது.

எனவே, ஏதாவது எலும்புகள் கிடைத்தால் அவற்றை மீண்டும் கல்லறையிலேயே புதைத்து விடுவதாக தெரிவித்துள்ளார்கள் கல்லறை ஊழியர்கள்!

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்