கனடாவில் கொலை செய்யப்பட்ட இரண்டு நபர்கள்! அதில் தொடர்புடைய இளைஞன் புகைப்படம் வெளியீடு

Report Print Raju Raju in கனடா

கனடாவில் இரண்டு பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான தகவலை பெற நபர் ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

Calgary-ஐ சேர்ந்த Mohamed Khalid Shaikh (19) மற்றும் Abas Ahmed Ibrahim (27) ஆகிய இருவரும் கடந்த மாதம் 28ஆம் திகதி சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் கொலை குறித்து முக்கிய விடயத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி Jordan Jay Ward என்ற 20 வயது இளைஞனுக்கு கொலை தொடர்பில் சில முக்கிய தகவல்கள் தெரியும் என பொலிசார் நம்புகிறனர்.

இதையடுத்து அவரை தேடி வரும் பொலிசார், அவர் குறித்து தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்