கனடாவில் 14 வயது சிறுமியை கடத்தி சென்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது! வெளிவந்த பின்னணி தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் 14 வயது சிறுமியை கடத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் பெண் உள்ளிட்ட இருவரை பொலிசார் கைது செய்தனர்.

Nova Scotia மாகாணத்தின் Lunenburg கவுண்டியில் 14 வயது சிறுமி காணாமல் போனதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தேடுதல் வேட்டையை பொலிசார் தொடங்கிய நிலையில் சிறுமி Conquerall Mills பகுதியில் இருக்கலாம் என தெரியவந்தது.

அங்கு பொலிசார் சென்ற போது குறித்த சிறுமி பெண் ஒருவருடன் சென்றதை கண்டுபிடித்து சிறுமியை மீட்டனர்.

பின்னர் கிங்ஸ் கவுண்டியை சேர்ந்த அந்த 29 வயது பெண் மற்றும் 31 வயது ஆண் என இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

சிறுமியை கடத்தியதாக அவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டது.

இதன் பிறகு இருவரும் சில நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனர், அதாவது சிறுமியுடன் தொடர்பு இருக்கக்கூடாது என இருவருக்கும் உத்தரவிடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணை நடந்து வரும் நிலையில் விடுவிக்கப்பட்ட இருவரும் வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர் என தெரியவந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்