ரொரன்றோவைச் சேர்ந்த இளம்பெண் கைது: வெளியான அதிர்ச்சிப் பின்னணி

Report Print Balamanuvelan in கனடா
402Shares

ரொரன்றோவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

Haleema Mustafa என்ற அந்த பெண் தீவிரவாத குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தீவிரவாத குழு ஒன்றில் இணைவதற்காக அவர் கனடாவிலிருந்து வெளியேறியதற்காக Haleema கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தன் கணவர் Ikar Maoஉடன் துருக்கிக்கு Haleema பயணித்த நிலையில், சிரியாவிலுள்ள தீவிரவாதக் குழுவில் அவர்கள் இணைவதற்காக செல்லலாம் என்ற அச்சத்தின்பேரில் துருக்கி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்கள்.

Ikar Mao மீது ஏற்கனவே இரண்டு தீவிரவாத குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டு, அவர் ஜாமீன் மறுக்கப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள Haleema, இன்று அல்லது நாளை கனடா நீதிமன்றம் ஒன்றில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்