கனடாவில் உள்ள தெற்காசிய பெண்கள் தொடர்பாக வெளியான அதிமுக்கிய தகவல்

Report Print Raju Raju in கனடா
240Shares

கனடாவில் தெற்காசியா மற்றும் கருப்பின பெண்கள் தான் அதிக வேலையின்மை விகிதங்களை கொண்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஜூலை மாதத்துக்கான புள்ளிவிபரங்களை Statistics Canada வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்சனை இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அதன்படி கனடாவில் கடந்த ஜூலை மாதம், 15ல் இருந்து 69 வயதுடைய 20.4 சதவீத தெற்காசிய பெண்கள் வேலையில்லாமல் இருந்துள்ளனர்.

அதே போல 20.3 சதவீத அரபிய பெண்களும், 18.6 சதவீத கருப்பின பெண்களும் வேலையில்லாமல் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து மாறுபட்ட பின்னணியிலான பெண்களுக்கான நெட்வொர்க்கிங் அமைப்பான Women of Influenceன் இணை தலைமை நிர்வாகி Stephania Varalli கூறுகையில், தெற்காசிய மற்றும் கருப்பின பெண்கள் இனவெறி மற்றும் பகுதி நேர வேலைகள் தொடர்பில் பல சவால்களை இந்த காலக்கட்டத்தில் எதிர்கொள்கின்றனர்.

இது ஒரு பெரிய மற்றும் பயமுறுத்தும் பிரச்சினையாகும், இதை தீர்ப்பது எளிதானது அல்ல என கூறியுள்ளார்.

அதே நேரத்தில் கடந்த ஜூலை மாதத்தில் கனடாவில் 418,500 வேலைகள் கிடைத்துள்ள நிலையில் வேலையின்மை விகிதம் 10.9% ஆக குறைந்துள்ளது.

வேலையின்மை விடயத்தில் ஆண்கள் மற்றும் பெண்களை சேர்த்தால் தெற்காசியாவை சேர்ந்தவர்கள் தான் 17.8 சதவீதம் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கடுத்து அரபியாவை சேர்ந்தவர்கள் 17.3 சதவீதமும், கருப்பினத்தவர்கள் 16.8 சதவீதமும் வேலையில்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்