பழிக்கு பழியா? சீனாவில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டு கனடா நாட்டவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

Report Print Basu in கனடா

சீன நீதிமன்றம் மற்றொரு கனேடியருக்கு போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தி செய்ததற்காக Ye Jianhui என்ற கனேடியருக்கு மரண தண்டனை விதித்ததாக சீன நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் தயாரித்ததற்காக கனடா நாட்டவர் Xu Weihong-ற்கு மற்றொரு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்த ஒரு நாள் கழித்து Ye Jianhui மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

தெற்கு நகரமான ஃபோஷனில் நடந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் Ye Jianhui-க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக ஃபோஷன் இடைநிலை மக்கள் நீதிமன்றம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

Ye Jianhui மற்றும் ஐந்து ஆண்கள் தங்கியிருந்த அறையில் 218 கிலோகிராம் போதைப்பொருட்களை பொலிசார் கண்டுபிடித்தனர் என உள்ளூர் ஊடக தகவல் தெரிவித்துள்ளன.

மற்ற ஐந்து பேரும் சீன நாட்டினர், அவர்களில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, மீதமுள்ளவர்களுக்கு ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்ற அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த இரண்டு நாட்களுக்குள் இரண்டாவது கனேடியருக்கு போதைப்பொருட்கள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் கனடா ஒரு உயர் ஹவாய் நிர்வாகியை கைது செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை சீனாவில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் நான்கு கனடா நட்டவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனா கடந்த ஆண்டு கனேடியர்கள் Robert Lloyd Schellenberg மற்றும் Fan Wei ஆகியோருக்கு தனி வழக்குகளில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதித்தது. இரண்டு பேரும் முறையீடு செய்துள்ளனர்.

2018ம் ஆண்டு அமெரிக்கா பிடியாணையின் கீழ் கனேடிய காவல்துறையினர் ஹவாய் டெக்னாலஜிஸ் கோ லிமிடெட் [HWT.UL] தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஷோவை வான்கூவரில் கைது செய்த பின்னர் சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகள் கடுமையாக மோசமடைந்தன.

கனடா போதைப்பொருள் குற்றவாளிகளின் தண்டனை மெங்கின் வழக்கோடு தொடர்புடையதா என்று கேட்கப்பட்டதற்கு, சீனாவின் நீதித்துறை வழக்குகளை சுயாதீனமாக கையாளுகின்றன என்று சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறினார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனைத்து கனேடிய குடிமக்களுக்கும் கருணை வழங்க வேண்டும் என கனடா கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்