கனடாவில் 36 வயது பெண்ணின் நிலை குறித்து கவலைப்படும் பொலிசார்! புகைப்படத்துடன் வெளியான பின்னணி

Report Print Raju Raju in கனடா

கனடாவில் காணாமல் போயுள்ள பெண் தொடர்பில் புகைப்படத்துடன் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Winnipeg பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் Alicia Flett என்ற 36 வயது பெண் கடந்த திங்கட்கிழமையில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Winnipegன் West Alexander பகுதியில் அவர் கடைசியாக காணப்பட்டுள்ளார்.

அவரின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மெலிதான உடல் வாகு கொண்ட Alicia Flett 120 பவுண்டுகள் எடை கொண்டவர் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

அவர் கருப்பு சட்டை, கருப்பு பேண்ட், தலையில் தொப்பி மற்றும் கருப்பு நிற காலணிகள் அணிந்திருப்பதாக நம்பப்படுகிறது.

Alicia தொடர்பில் பொதுமக்களின் உதவி தேவை என கூறியுள்ள பொலிசார் அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்