தனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்ட சீக்கிய அமைப்பு! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கனடா

Report Print Raju Raju in கனடா
2578Shares

காலிஸ்தான் அமைப்பு சீக்கியர்களுக்குத் தனிநாடு கோரி நடத்தும் பொது வாக்கெடுப்பை அங்கீகரிக்கப் போவதில்லை என கனடா அதிரடியாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் என்னும் அமைப்பு இந்தியாவில் இருந்து பஞ்சாபைத் தனியாகப் பிரித்துக் காலிஸ்தான் தனி நாடு கோருவது குறித்து வெளிநாடுவாழ் சீக்கியர்களிடம் வரும் நவம்பரில் பொது வாக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிரான இந்த வாக்கெடுப்பை அங்கீகரிக்கக் கூடாது எனக் கனடாவை இந்தியா கேட்டுக்கொண்டது.

ஏனவே இந்த விவகாரத்தில் கனடாவின் முடிவு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கனடா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சலில் அளித்த பதிலில், இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றை மதிப்பதாகவும், சீக்கியர்களின் பொதுவாக்கெடுப்பை கனடா அங்கீகரிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்