கனடாவில் சிக்கியிருந்த நடிகர் விஜய்யின் மகன் எப்படியிருக்கிறார்? கசிந்த முக்கிய தகவல்

Report Print Raju Raju in கனடா
842Shares

கனடாவில் சிக்கி கொண்டு தமிழகம் வர முடியாமல் தவித்து வந்த நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது பத்திரமாக ஊர் திரும்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் சினிமா தொடர்பான படிப்பை படித்து வருகிறார், இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதை அடுத்து சென்னை திரும்ப முடியாமல் சஞ்சய் விஜய் கனடாவில் சிக்கிக்கொண்டார்.

இருப்பினும் அவர் கனடாவிலுள்ள விஜய்யின் உறவினர் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் விமானங்கள் இயங்க தொடங்கியதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் சஞ்சய் விமானம் மூலம் சென்னை திரும்பியதாக தெரிகிறது.

இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படடிருக்கிறார்.

இதையடுத்து தற்போது தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடைந்ததும் சஞ்சய் வீடு திரும்பி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மாதக்கணக்கில் வெளிநாட்டில் சிக்கி கொண்ட சஞ்சய் பத்திரமாக வீடு திரும்பியது அவர் குடும்பத்தாரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்