கனடாவில் பூங்காவில் நடந்து சென்ற ஆசிய பெண் மீது எச்சில் துப்பிய நபர் இனவெறியை தூண்டும் வகையில் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Calgaryல் உள்ள பூங்காவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. Jessica Lau என்ற ஆசிய இளம்பெண் பூங்காவுக்கு தனது காதலனுடன் சென்றுள்ளார்.
அப்போது அவர் நடந்து செல்வதை காதலன் தனது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் இளைஞன் ஒருவன் Jessicaவுக்கு எதிர் திசையில் மிதிவண்டியில் வந்து கொண்டிருந்தான்.
Jessica அருகில் வந்த இளைஞன் அவர் மீது எச்சில் துப்பிவிட்டு, இனவெறியை தூண்டும் வகையில் மோசமாக பேசிவிட்டு சென்றுள்ளான்.
Part 2 of 3 Charges pending after racist encounter in Calgary park: police #TheSavageRoom #Savage pic.twitter.com/QvyeHZ44aa
— The Savage Room (@The_SavageRoom) July 20, 2020
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பொலிசார் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணான Jessica கூறுகையில், என்னுடைய வாழ்க்கையில் நான் அனுபவித்த முதல் இனவெறி தாக்குதல் இதுதான்.
மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டுள்ளேன் என கூறியுள்ளார்.