ஓவென கதறிய தாயார்... கண்ணீரை அடக்க முடியாமல் தவித்த உறவினர்கள்: உள்ளத்தை உடைக்கும் ஒரு வீடியோ!

Report Print Balamanuvelan in கனடா
1690Shares

தனது மகள்கள் இருவரும் மர்மமான முறையில் இறந்துகிடந்த நிலையில், அவர்களை நினைவுகூறும் நிகழ்ச்சி ஒன்றின்போது கண்ணீர் விட்டுக் கதறினார் அந்த தாயார்.

கியூபெக்கைச் சேர்ந்த மார்ட்டின் (44), தனது மகள்கள் நோரா (11) மற்றும் ரோமி (6) ஆகியோருடன் மாயமான நிலையில், பிள்ளைகள் இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்கள்.

மார்ட்டினை இன்னமும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதற்கிடையில், மார்ட்டினும் பிள்ளைகளும் சென்ற கார் பயங்கர விபத்தொன்றை சந்தித்துள்ளதால், காரிலிருந்து கால்நடையாகவே புறப்பட்ட மார்ட்டின் ஒருவேளை காயம் காரணமாக இறந்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.

ஆனால், பொலிசார் எப்படியாவது மார்ட்டின் உயிரோடு கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

காரணம், மார்ட்டின் கிடைத்தால்தான் அவரது மகள்கள் இருவரும் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவரும்.

இந்நிலையில், பிள்ளைகளின் தாயாகிய Amélie Lemieux, பிள்ளைகளின் நினைவாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கண்ணீர் விட்டுக் கதறியது காண்போர் மனதை உடைக்கும் வகையில் இருந்தது.

அவர் ஓவென கதறியழ, அவர் அழுவதைக் கண்டு அவருக்கு ஆறுதல் கூற வந்தவர்கள் அழுகையை அடக்கமுடியாமல் தவிக்க, அந்த வீடியோவைப் பார்த்தால் நம்மாலும் நிச்சயம் அழுகையை அடக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம்.

என் பிள்ளைகளைப் பெறுவதற்காக நான் தவமிருந்தேன் என்று கூறி கண்ணீர் விட்ட Amélie, நீங்கள் பிறந்ததும் உங்கள் இருவரையும் அளவில்லாமல் நேசிக்க ஆரம்பித்துவிட்டேன், நீங்கள்தான் என் வாழ்க்கையே, உங்களால்தான் நான் உயிர் வாழ்கிறேன், என கண்ணீருக்கு மத்தியில் தட்டுத்தடுமாறி பேசினார்.

நீங்கள் என் அன்பிற்குரிய இளவரசிகள் என்று கூறிய Amélie, வானத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் நட்சத்திரங்களாக தோன்றும் உங்கள் வழிகாட்டுதலின்படிதான் என் வேதனையின் மத்தியில் இனி நடப்பேன், உங்களை பைத்தியக்காரத்தனமாக நேசிக்கிறேன், என்றென்றும் நேசிப்பேன் என்று அவர் கதறியபோது, அவர் அருகில் இருந்த சிறுபிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை கண்ணீரை அடக்க முடியாமல் அழுவதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்