சீன தயாரிப்புகளை புறக்கணிக்கும் முடிவு: 80 சதவிகித கனேடியர்கள் ஆதரவு

Report Print Balamanuvelan in கனடா

சீன தயாரிப்புகளை புறக்கணிக்கும் முடிவுக்கு 80 சதவிகிதத்துக்கும் அதிகமான கனேடியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Angus Reid Institute என்னும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், சீனா தயாரிப்புகளை புறக்கணிப்பதன் மூலம், அவர்களுக்கு ஒரு பாடத்தை புகட்டவேண்டுமென 81 சதவிகிதம் கனேடியர்கள் விரும்புவதாக தெரியவந்துள்ளது.

கனேடியர்கள் இருவர் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, சீனா அவர்களை சிறையிலடைத்துள்ளதைத் தொடர்ந்து மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

சீன தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாயின் தலைமை நிதி அதிகாரியான மெங்வான்சவ் கனடாவில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதற்கு பழிவாங்கவே இந்த நடவடிக்கையை சீன அரசு எடுத்துள்ளதாக கனடா அரசு குற்றம் சாட்டுகிறது.

கைது செய்யப்பட்ட கனேடியர்களை வைத்து பேரம்பேசி மெங்வான்சவ்வை விடுவிக்க சீனா முயல்வதாக கனடா கூறுகிறது.

இந்த யோசனையை ஏற்கனவே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிராகரித்துவிட்டார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த முடிவை 72 சதவிகிதம் கனேடியர்கள் ஆதரிக்கின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்