கொரோனா அச்சம்... வெளிநாட்டில் இருக்கும் கனடியர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு!

Report Print Santhan in கனடா

கனடா கொரோனா வைரஸிற்கு எதிராக போராடி வரும் நிலையில், வெளிநாட்டில் இருக்கும் கனட மக்களுக்கு பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ முக்கிய அறிவுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதிலும் தற்போது வரை 307,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,051 பேர் உயிரிழந்துள்ளனர். 95,797 பேர் சிகிச்சைக்கு பின் நல்ல நிலையில் வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நோய் உலகை அச்சுறுத்தும் ஒரு கொடிய நோயாக மாறி வருவதால், ஐரோப்பிய நாடுகள் இந்த கொரோனாவிடம் இருந்து தப்பிப்பதற்காக போராடி வருகின்றன.

அந்த வகையில் கனடாவில் மட்டும் இந்த கொரோனா வைரஸால் இன்று காலை வரை 1,328 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கனடா அரசு தங்கள் நாட்டு மக்களை பாதுகாத்து கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சற்று முன், வெளிநாட்டில் இருக்கும் கனடியர்கள், நாட்டிற்கு திரும்ப விரும்பினால், உடனடியாக @TravelGoC-வில் தயவு செய்து பதிவு செய்யுங்கள், நாங்கள் உடனடியாக முக்கியமான தகவலை பெற முடியும், இதை நீங்கள் ஆன்லைனில் செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்