கொரோனா அச்சத்தால்தான் மகனை கனடாவில் விட்டு வந்தோம்: இந்திய இலங்கை கல்வியாளர்கள் முன் பேசிய மேகன் தகவல்!

Report Print Balamanuvelan in கனடா

இந்தியா, இலங்கை உட்பட 11 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் முன் பேசிய பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன், கொரோனா அச்சத்தாலேயே குட்டி இளவரசர் ஆர்ச்சியை கனடாவில் விட்டுவந்தோம் என்று கூறியுள்ளார்.

ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகும் முன், கடைசி நிகழ்ச்சிகளில் ஒன்றாக, காமன்வெல்த் பல்கலைக்கழக கூட்டமைப்பின் கல்வியாளர்கள் சிலரை சந்தித்தார் மேகன்.

அந்த நிகழ்ச்சியில், உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸை தடுப்பது குறித்து பேசியுள்ளார் மேகன்.

அந்த நிகழ்ச்சியில் பேசும்போதுதானே, தங்கள் மகன் ஆர்ச்சியை கனடாவிலேயே விட்டு விட்டு பிரித்தானியாவுக்கு வந்த காரணமே, உலகமே கொரோனா அச்சத்திலிருக்கும் நிலையில், குழந்தையின் உடல் நலம் மீதன அக்கறையில்தானேயொழிய வேறொன்றுமில்லை என்று கூறியுள்ளார் மேகன்.

Getty

ஆனால், ஹரியும் மேகனும் தங்கள் மகன் ஆர்ச்சியை கனடாவிலேயே விட்டு வந்த விடயம் பிரித்தானிய மகாராணியாரை மிகவும் அப்செட்டாக்கியது.

மேகன் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில், மாலவி, இந்தியா, கேமரூன், பங்களாதேஷ், நைஜீரியா, பாகிஸ்தான், கானா, ருவாண்டா, கென்யா, மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் பங்கேற்றனர்.

இதற்கிடையில், மேகன் பாதுகாப்பானது எனக் கருதும் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவியே கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

PA

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்