கனடா மக்களின் பாதுகாப்பு... மனைவிக்கு கொரோனா உறுதியான பின் பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Santhan in கனடா

கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் மனைவியையும் தாக்கியுள்ளது. இதன் காரணமாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

அதில், கொரோனா வைரஸ் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் கனடாவில் இருக்கும் கொரோனா வைரஸின் நிலை, நம்மை எப்படி காத்து கொள்வது, கொரோனாவின் அறிகுறிகள் என்ன, போன்றவைகள் அதில் இருக்கிறது.

அதற்கு அடுத்தபடியாக, நாளை, நாடு முழுவதிலும் இருக்கும் தலைவர்களுடன் நான் பேசவுள்ளேன். கொரோனா பாதிப்பில் இருந்து கனடா மக்களை பாதுக்காப்பாக வைத்திருக்கவும், நமது பொருளாதாரத்தில் கொரோனாவின் இன் தாக்கத்தை குறைப்பது பற்றியும் பேசவுள்ளேன்.

நான் நல்ல நிலையில் இருக்கிறேன். எனக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்டு வருகிறேன், அவர்கள் சொல்லும் படி கேட்டு வருகிறேன். நான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால், வீட்டில் இருந்தபடி அனைத்து வேலைகளையும் மற்றும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசுகிறேன்.

தன்னுடைய மனைவியான Sophie’s-வுக்கு எதிர்பாரதவிதமாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த நேரத்தில் அவள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாள். அறிகுறிகள் சிறிய அளவில் இருக்கின்றன. மருத்துவர்களின் அறிவுரையை Sophie’s கேட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்