நான் மீண்டு வருவேன்! கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கனடிய பிரதமரின் மனைவி உருக்கமான அறிக்கை

Report Print Raju Raju in கனடா

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி Sophie-க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் அவர் உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கும் வேகமாக பரவியுள்ளது.

பொதுமக்களை மட்டுமின்றி உலக நாடுகளில் முக்கிய தலைவர்களையும் கொரோனா தாக்கி வருகிறது.

இந்நிலையில் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி Sophie Gregoireவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், என் நண்பர்கள், குடும்பத்தார், கனடியர்களுக்கு, நான் எப்படி உள்ளேன் என அக்கறை கொண்டு விசாரித்த அனைவருக்கும் பெரிய நன்றி.

நான் வைரஸ் அறிகுறியால் பாதிக்கப்பட்டிருந்தாலும், நான் விரைவில் மீண்டு வருவேன்.

கனடாவில் வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமையில் உள்ளவர்கள் போலவே நானும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன்.

இந்த நிலையை நாம் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக கடப்போம், உங்கள் உடல்நிலையை கவனமாக பார்த்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்