கனடாவில் தாய் கண்ணீர்... சீனாவில் சிக்கிய 2 வயது மகள்! காப்பாற்ற போராடும் பரிதாபம்

Report Print Santhan in கனடா

கனடாவை சேர்ந்த தாய் ஒருவர் சீனாவில் இருக்கும் தன்னுடைய இரண்டு வயது மகளை யாராவது அழைத்து வரமாட்டார்களா? என்ற ஏக்கத்துடன் இருப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பிரான்ஸ், கனடா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளிள் பரவி வருகிறது. சீனாவிற்கு சென்று திரும்பிய அவர்களிடமிருந்தே இந்த வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கனடாவில் இருக்கும் Amelia Pan என்ற தாய் கொரோனோ வைரஸால் சிக்கி தவிக்கும் சீனாவில் தன்னுடைய 2 வயது மகள் இருப்பதால், அவரை எப்படியாவது அழைத்து வர வேண்டும் என்று வேதனையில் இருக்கிறார்.

கனடா குடியுரிமை பெற்ற Amelia Pan சீனாவை சேர்ந்தவர்.

Courtesy of Amelia Pan/Handout via REUTERS

அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், சீனாவில் இருக்கும் கனடா மக்களை மீட்பதற்காக நாளை விமானம் ஒன்று அனுப்பப்படவுள்ளது, இந்த விமானத்தில் அங்கிருக்கும் கனடியர்கள் செல்லலாம் என்று கூறப்பட்டது.

இந்த விமானத்தில் தான் என்னுடைய 2 வயது மகளை அழைத்து வர யாரேனும் உதவமாட்டார்களா? என்று இருக்கிறேன்.

கடந்த மாதம் 17-ஆம் திகதி என்னுடைய கணவர் Wei Ye-க்கு சீனாவில் இருக்கும் அவருடைய சகோதரி தொடர்பு கொண்டார். அவர் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை, மிகவும் மோசமாக இருக்கிறது என்று கூறியதால், அவர் தன்னுடைய 2 வயது மகள் Cerena-வுடன் சென்றார்.

Courtesy of Amelia Pan/Handout via REUTERS

அதன் பின் அங்கு சென்ற போது சில தினங்களில் அவர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டதாக கூறினார். ஆனால் ஜனவரி 26-ஆம் திகதி அவர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இறந்திருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின் அவருடைய தாயாருக்கும் காய்ச்சல் இருப்பதாக கூறினார்.

தாயாரை பரிசோதித்த போது அவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட, இதைத் தொடர்ந்து என் கணவருக்கும் நடந்த சோதனையில், அவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் என் மகளுக்கும் இந்த பாதிப்பு இருக்கலாம் என்று அஞ்சப்பட்டதால், அவள் ஒரு மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாள்.

ஆனால் அவளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. அவளை அங்கிருக்கும் பக்கத்து வீட்டினர் தான் முதலில் கவனித்து வந்துள்ளனர். தற்போது என்னுடைய மாமியார், கணவர் இருவருக்குமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், அவர்களால் கனடாவிற்கு வரும் விமானத்தில் வர முடியாது.

Courtesy of Amelia Pan/Handout via REUTERS

என் மகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை, அவள் சிறு குழந்தை, அவளுக்கு ஒன்றுமே தெரியாது, அவள் அங்கிருந்தால் இந்த நோய் பாதிக்க கூடும் என்ற பயம் இருப்பதால், கனடாவிற்கு வரும் விமானத்தில், அவளை யாராவது அழைத்து வருவதற்கு உதவினால் மிகவும் உதவியாக இருக்கும், அவரை நான் தேடி வருகிறேன், இதற்காக நான் கனடா அதிகாரிகளுடன் தொடர்பிலே இருக்கிறேன்.

என் மகளை எப்படியாவது அந்த விமானத்தில் அழைத்து வர வேண்டும் என்று வேதனையுடன் கூறியுள்ளார். கணவர் சீனாவில் கொரோனா வைரஸால் பாதிப்பில் இருக்க, மகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஒரு புறம் இருக்க, Amelia Pan என்ன செய்வது என்றே தெரியாமல் மிகவும் வேதனையில் உள்ளார்.

மேலும் Amelia Pan-வுன் மகள் வுஹான் நகரத்திற்கு அருகே இருக்கும் Yingshan-ல் இருக்கும் மருத்துவமனையில் கவனிக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்