தமிழச்சியாக மாறிய கனடிய பெண்! தமிழருடன் அவருக்கு நடைபெற்ற திருமணம்

Report Print Raju Raju in கனடா

கனடிய பெண்ணை புதுவையை சேர்ந்த பொறியாளர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

புதுவை வீமநகரை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி வளர்மதி. இந்த தம்பதியின் மகன் ஞான சம்பந்தம் என்ற சதீஷ்.

புதுவையில் பிளஸ்-2 வரை படித்த சதீஷ் கனடா சென்று பொறியியல் பட்டப்படிப்பு படித்தார்.

அங்கு அவருடன் படித்த அந்நாட்டை சேர்ந்த சமந்தா புலார்டு பேட்டர்சன் என்ற பெண்ணை காதலித்தார். படிப்பு முடிந்ததும் இருவருக்கும் ஒரே நிறுவனத்தில் வேலை கிடைத்ததோடு அவர்களின் காதலும் தொடர்ந்தது.

இது குறித்து அறிந்த இரு குடும்பத்தாரும் சதீஷ் - சமந்தா காதலுக்கு பச்சை கொடி காட்டினார்கள்.இதையடுத்து திருமணம் செய்து கொள்ள காதலர்கள் முடிவு செய்தனர்.

இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு புதுவை சொக்கநாதன் பேட்டையில் உள்ள தமிழ் திருமண நிலையத்தில் நேற்று நடந்தது.

மணப்பெண் சமந்தா கூரை புடவையில் தமிழ்ப்பெண்ணை போல அழகாக காட்சியளிக்க, ஞானசம்பந்தம் பட்டு சட்டை- வேட்டியும் அணிந்திருந்தார்.

இந்த திருமணத்தில் கனடாவில் இருந்து சமந்தாவின் பெற்றோரான வின்சென்ட் பேட்டர்சன், சன்டல் புலார்டு பேட்டர்சன் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் அரசியல் பிரமுகர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்