அதிகளவு வெளியேறிய இரத்தம்! எலும்பில் பாதிப்பு.. கனடாவில் உயிருக்கு போராடும் தமிழ் மாணவியின் தற்போதைய நிலை

Report Print Raju Raju in கனடா

கனடாவில் சரமாரியாகக் குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவியின் தற்போதைய நிலை குறித்து தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் புரூக்லேண்ட் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான ஆல்பர்ட், ஜென்ட் தம்பதியரின் மகள் ரேச்சல் (23).

இவர் கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அறிவியல் பிரிவில் உயர் கல்வி பயின்று வந்தார்.

ரேச்சலை சில தினங்களுக்கு முன்னர் வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியுள்ளார்.

அதிகளவு ரத்தம் வெளியேறிய நிலையில் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கழுத்தில் ஏற்பட்டிருந்த பலத்த காயம் காரணமாக உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனிடையில் ரேச்சலின் தற்போதைய நிலை குறித்து தெரியவந்துள்ளது.

அவருக்கு ரத்தம் அதிகம் வெளியேறியதுடன் எலும்பிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். செயற்கை சுவாசம் அளித்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெற்றோர் நேரில் சென்றபின் தான் உண்மை நிலவரம் தெரிய வரும் என்கின்றனர்‌.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்