கனடாவையும் விட்டு வைக்காத கொடிய கொரோனா வைரஸ்... அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Basu in கனடா

சீன நகரமான வுஹானில் இருந்து கனடா திரும்பிய குடியிருப்பாளருக்கு கொடிய கொரோன வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபரை கனடா அடையாளம் கண்டுள்ளதாக கனடா சனிக்கிழமை அறிவித்துள்ளது.

ஒன்ராறியோ சுகாதார அதிகாரிகள் கூறியதாவது, நோயாளி தனது 50 வயதுடைய ஆண், ஜனவரி 22 அன்று சீனாவில் இருந்து டொராண்டோ வந்துள்ளார், சுவாச நோய் அறிகுறிகளுக்கு பின்னர் மறுநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என தகவல் அளித்துள்ளனர்.

ஒன்ராறியோவின் துணை சுகாதார மருத்துவ அதிகாரி பார்பரா யாஃப் செய்தியாளர்களிடம் கூறுகையில், அந்த நபர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவர் நிலையாக உள்ளார்.

டொராண்டோவுக்கு வந்ததிலிருந்து நபரின் மற்றவர்களுடனான தொடர்பு பற்றிய விவரங்களை ஒன்ராறியோ சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

டொராண்டோ விமான நிலையத்திற்கு வந்தபின் அவர் தனியார் போக்குவரத்தின் மூலம் வீட்டிற்கு சென்றுள்ளார், பின்னர் மருத்துவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வைரஸ் ஆரம்பக்கட்டத்தில் உள்ளதால் தொடர்பு கொள்வதன் மூலம் பரவும் வாய்ப்பு மிகக் குறைவு. இருப்பினும், அவரது குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அவர்கள் கூறினர்.

கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்தும் மாகாண ஆய்வகத்தின் முடிவுகள் சனிக்கிழமை வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளுர் ஆய்வகத்தின் முடிவுகள் கனடாவின் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகத்தால் உறுதிசெய்யப்பட்டவுடன், இந்த வழக்கு நாட்டின் முதல் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸாக அறிவிக்கப்படும்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்