பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் கனடாவுக்கு குடிபெயர இருப்பதாக அறிவித்தாலும் அறிவித்தார்கள், கனேடியர்கள் பிரித்தானிய ராஜ குடும்பத்தினரைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை உலகமே கவனிக்க ஆரம்பித்துவிட்டது.
கனடாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றிலிருந்து, கனேடியர்கள் அடுத்து பிரித்தானியாவுக்கு யார் மன்னராகவேண்டும் என்பது வரை யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதைக் காணமுடிகிறது.
உண்மையில் தற்போது பிரித்தானியாவை ஆளும் மகாராணியாருக்கு அடுத்து இளவரசர் சார்லஸ்தான் மன்னராகவேண்டும்.
ஆனால், இளவரசர் வில்லியம்தான் மன்னராகவேண்டும் என்று விரும்புகிறார்கள் கனேடியர்கள்.
இந்த வாரம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், இவர்களில் யார் பிரித்தானிய மன்னராவதை விரும்புகிறீர்கள், யார் மன்னராவதை விரும்பவில்லை என்று 1,154 வயதுவந்த கனேடியர்களிடம் கேட்கப்பட்டது.

ஆய்வின் முடிவுகள், 58 சதவிகிதம் கனேடியர்கள் இளவரசர் வில்லியம் மன்னராவதை ஆதரிப்பதாகவும், 42 சதவிகிதத்தினர் எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளன.
ஆனால், யாரும் எதிர்பாராவிதமாக, அதிர்ச்சியளிக்கும் வகையில், இளவரசர் சார்லசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
இளவரசர் சார்லஸ் மன்னராவதை 43 சதவிகிதம் கனேடியர்கள்தான் ஆதரிக்கின்றனர். 57 சதவிகிதம்பேர், சார்லஸ் மன்னராவதை விரும்பவில்லை என்பது அந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.
