பிரித்தானிய இளவரசர் ஹரி மேகனுக்கு கனடாவில் வரவேற்பில்லை: ஒரு அதிர்ச்சி தகவல்!

Report Print Balamanuvelan in கனடா

பிரித்தானிய இளவரசர் ஹரி மேகனுக்கு கனடாவில் வரவேற்பில்லை என கனடாவின் மிகப்பெரிய நாளிதள் ஒன்று அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.இதுவரை எந்த ராஜ குடும்பத்தினரும் கனடாவை தங்கள் வீடாக்கியதில்லை என்று கூறியுள்ளது அந்த நாளிதள்.

பிரித்தானிய மகாராணியார், தனது பேரன் ஹரியும் அவரது மனைவியும் ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறுவதை விரும்பாவிட்டாலும், குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களுடனான கலந்தாலோசனையை அடுத்து, அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்.

Sandringhamஇலுள்ள மகாராணியாரின் வீட்டில் நடந்த கூட்டத்தைத் தொடர்ந்து, ஹரி மேகன் தம்பதி தங்கள் பொறுப்புக்களிலிருந்து விலகவும், கனடாவுக்கு சென்று நேரம் செலவிடவும் அனுமதியளித்துள்ளார்.

ஆனால், இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து அந்த பிரபல நாளிதழ், ஹரியும் மேகனும் கனடாவுக்கு குடிபெயர்வதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

Credit: AFP or licensors

தம்பதி எடுக்கும் எந்த நடவடிக்கையும், ஒரு காலத்தில் பிரித்தானியாவால் ஆளப்பட்ட கனடாவை பிரித்தானியாவிலிருந்து தள்ளி வைத்திருக்கும் சட்டங்களை மீறுவதாக அமையும் என்கிறது அந்த நாளிதழ்.

நீங்கள் கனடாவுக்கு விருந்தினர்களாக வரலாம், ஆனால் நீங்கள் மூத்த ராஜ குடும்பத்தினர்களாக இருக்கும் வரை நீங்கள் இங்கு குடியேறுவதை கனடா அனுமதிக்க முடியாது என்கிறது அந்த நாளிதழ்.

அரசியல் சாசனப்படி ஒரு ராஜ குடும்ப உறுப்பினர், அதுவும், ராஜ குடும்ப வரிசையில் ஆறாவது நபரை கனடா அனுமதிக்க முடியாது என்கிறது அந்த நாளிதழ்.

AFP or licensors

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்