கனடாவில் அழகான இந்திய இளம்பெண் 6 நாட்களாக மாயம்! புகைப்படங்களுடன் வெளியான தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் காணாமல் போன இந்திய இளம்பெண் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

ரொரன்ரோ பொலிசார் வெளியிட்ட அறிக்கையில் Heeral Patel என்ற 28 வயதான இளம்பெண் கடந்த 11ஆம் திகதியில் இருந்து மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கடைசியாக இரவு 11 மணிக்கு Islington Av + Steeles Av W பகுதியில் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன அன்று Heeral Patel சாம்பல் நிற பேண்ட்டும், கருப்பு நிற சட்டையும் அணிந்திருந்ததாகவும் அவர் குறித்து தகவல் தெரிந்தால் தங்களிடம் கூறலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் இது குறித்த பதிவை சமூகவலைதளங்களிலும் வெளியிட்டுள்ளனர், அந்த பதிவு அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்