ஈரானின் தவறால் உயிரிழந்த 57 கனேடியர்கள்! கண்டிப்பாக இதை செய்வேன் என ஜஸ்டின் ட்ரூடோ சத்தியம்

Report Print Santhan in கனடா

உக்ரேன் விமான விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கனடாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில், அதில் பெரும்பாலானோர் ஈரான் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 8-ஆம் திகதி உக்ரேன் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று ஈரான் இராணுவத்தின் மனிதபிழை காரணமாக சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதனால் விமானத்தில் இருந்த 176 பேரும் பலியாகினர். அதில் 57 பேர் கனடாவை சேர்ந்தவர்கள்.

இதனால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, எட்மண்டனில் நடந்த ஒரு நினைவு நிகழ்வில், இந்த சோகம் எங்கள் ஈரானிய-கனேடிய சமூகத்தைத் தாக்கியது, இது உண்மையிலேயே கனேடிய சோகம் என்று கூறுவேன்.

இதற்கு சரியான பதில்கள் வரும் வரை நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம், இந்த சம்பவம் குறித்து, இதில் உண்மை வரும் வரை வரை விடமாட்டோம், என்பதை அனைத்து குடும்பங்களுக்கும் அனைத்து கனேடியர்களுக்கும் உறுதியளிக்க விரும்புகிறோம் என்று கூறினார்.

இந்நிலையில், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு விழாவில், விமான விபத்தில் தங்கள் உறவினர்களை இழந்த பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் ஈரானின் இந்த செயல் மீது கடும் கோபத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.

இது குறித்து அலி எஸ்னாஷானி என்பவர் கூறுகையில், நிறைய நம்பிக்கையுடனும் கனவுகளுடனும் குடியேறியவர்கள். அவர்கள் மிகவும் கடினமாக உழைத்தார்கள், அவர்கள் அதிக சாதனை புரிந்தவர்கள், அவர்கள் இங்கு வருவது காற்றின் நடுவில் சுடப்படுவதற்காக மட்டுமே என்று வேதனையுடன் கூறினார்.

அங்கிருந்தவர்கள், நாங்கள் இஸ்லாமிய குடியரசு அதிகாரிகளிடமிருந்து நீதி கோர வேண்டும், இந்த துயரத்திற்கு வழிவகுத்த மனித வாழ்க்கையை அலட்சியம் மற்றும் அக்கறை காட்டாததற்கு பதில்களையும் இழப்பீட்டையும் கோர வேண்டும்.

கனடா ஒரு பெரிய ஈரானிய புலம்பெயர்ந்தோரின் தாயகம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் 2016 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி 210,000 பேர் ஈரானுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.

அவர்களில் பாதி பேர் டொராண்டோவில் வாழ்கின்றனர், இது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்குப் பிறகு வட அமெரிக்காவில் மிக முக்கியமான ஈரானிய சமூகங்களில் ஒன்றாகும்.

பலியானவர்களில் ஒருவரை அறிந்த ஹோலா என்ற 50 வயது நபர், கனேடிய அரசாங்கம் இந்த மக்களுக்கு, குடும்பங்களுக்கும் அன்பானவர்களுக்கும் நீதி வழங்குவதாக உறுதியளித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கண்கலங்கிய படி கூறினார்.

மேலும் இந்த நிகழ்வில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர், பலரும் தங்கள் உறவினர்கள் இழப்பை தாங்க முடியாமல் கண்கலங்கினார். குறிப்பாக இதில் பெரும்பாலானோர் ஈரானை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்