ஈரான் விமான விபத்தில் பலியான கனேடியர்களில் இரண்டு புதுமணத் தம்பதியரும் பலியான சோகம்!

Report Print Balamanuvelan in கனடா

ஈரானில் 176 பேரை பலிகொண்ட விமான விபத்தில் இரண்டு புதுமணத் தம்பதியரும் இருந்தது தெரியவந்துள்ளது.

உக்ரைன் விமானம் டெஹ்ரானில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், விமான ஊழியர்கள் உட்பட 176 பேர் பலியானார்கள்.

பலியானவர்களில் 63 கனேடியர்கள் அடங்குவர். அவர்களில் எட்மண்டனைச் சேர்ந்த Arash Pourzarabi (26) மற்றும் Pouneh Gourji (25) இருவரும் திருமணம் செய்துகொள்வதற்காக ஈரானுக்கு சென்றுள்ளனர்.

திருமணம் செய்துகொண்டு, புதுமணத் தம்பதிகளாக அவர்கள் கனடாவுக்கு திரும்பும்போது விமான விபத்தில் அவர்கள் பலியாகியுள்ளனர்.

அவர்களுடன் திருமணத்திற்கு சென்றிருந்த மேலும் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர். தம்பதியர் இருவரும் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பயிலும் மாணவர்கள் ஆவர்.

மேலும் மொண்ட்ரியலைச் சேர்ந்த Siavash Ghafouri-Azar மற்றும் Sara Mamani தம்பதிக்கும் சமீபத்தில்தான் திருமணம் ஆகியுள்ளது.

உயிரிழந்த கனேடியர்களில் பலர் குளிர்கால விடுமுறை முடிந்து கனடா திரும்பிக் கொண்டிருந்த கனேடிய இரானியர்கள் ஆவர்.

அதேபோல், கனடாவிலுள்ள Guelph பல்கலைக்கழக மாணவியர்களான Ghanimat Azhdari மற்றும் Milad Ghasemi ஆகிய இருவரும், Azhdariயின் கணவரான Hamed Alibeikiயும் இதே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்