ரொரன்ரோவில் திருநங்கை ஒருவர் 29 வயது இளைஞரால் அடித்து கொலை! வெளிவரும் பின்னணி

Report Print Raju Raju in கனடா

கனடாவில் சமூக ஆர்வலராக உள்ள திருநங்கை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரொரன்ரோவை சேர்ந்தவர் ஜூலி பெர்மன். திருநங்கையான இவர் ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகளுக்கான உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

இந்நிலையில் கோலின் ஹர்னக் (29) என்பவரது அடுக்குமாடி வீட்டில் ஜூலி இருந்த போது கனமான பொருளால் தலையில் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கோலினை பொலிசார் கைது செய்துள்ள போதிலும் எதற்காக ஜூலி கொலை செய்யப்பட்டார் மற்றும் அதன் பின்னணி குறித்து இன்னும் தெரியவில்லை.

ஆனால் அடுக்குமாடி வீட்டில் சில மணி நேரம் இருவரும் பேசி கொண்டிருந்தார்கள் எனவும், பின்னர் ஏற்பட்ட பிரச்சனையில் ஜூலி கொல்லப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் ஜூலியும், கோலினும் எதற்காக சந்தித்து கொண்டார்கள் என தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...