கனடாவில் கார் வாங்கிய இரண்டே நாளில் காரை பறிகொடுத்து தவிக்கும் இந்திய மாணவர்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் கார் வாங்கி இரண்டே நாட்கள் ஓட்டிய நிலையில் அந்த காரை பறிகொடுத்துள்ளார் இந்திய மாணவர் ஒருவர்.

சர்வதேச மாணவரான Sachin Suresh, சென்ற மாதம் கார் ஒன்றை வாங்கியிருந்தார்.

அந்த கார் டிசம்பர் 26 வரை காப்பீடு செய்யப்படாததால் அவரால் 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே அந்த காரை ஓட்ட முடிந்தது.

இதற்கிடையில், சென்ற சனிக்கிழமை (28ஆம் திகதி), மலையாளிகள் கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றிற்காக தேவாலயம் ஒன்றின் பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு சென்றிருந்தார் Sachin.

அப்போது தனது ஓவர் கோட்டைக் கழற்றி தேவாலய முன்னறையில் போட்டுவிட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

Meg Roberts/CBC

மீண்டும் கோட்டை எடுக்கச் செல்லும்போது அவரது கோட் மட்டுமல்லாது அவரது நண்பர்கள் சிலரது கோட்டும் காணாமல் போயிருந்திருக்கிறது.

அதற்குப் பின்தான், தனது கார் சாவி கோட்டுக்குள் இருந்தது நினைவுக்கு வர, பதறிச் சென்று கார் இருக்கிறதா என்று பார்க்க, கார் காணாமல் போனது தெரியவந்துள்ளது.

அதிர்ந்து போன Sachin, தான் அந்த காரை வாங்கியதே அதை பயன்படுத்தி, கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேலை செய்து அதிலிருந்து வரும் பணத்தை படிப்பிற்கு பயன்படுத்தலாம் என்றும், படிப்பு முடிந்ததும், காரை விற்றுவிட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து இந்தியா திரும்ப விமான டிக்கெட் வாங்குவதற்குத்தான் என்றும் கிட்டத்தட்ட கண்ணீருடன் தெரிவிக்கிறார்.

Submitted by Sachin Suresh

தனது மொத்த சேமிப்பையும் செலவிட்டு காரை வாங்கியதாகவும், இப்போது தன்னிடம் பணம் இல்லை என்றும் கூறும் Sachin, தனது காப்பீடும், திருட்டு போன கார்களை திருப்பிக் கொடுக்கும் வகையிலானது இல்லை என்பதால் திகைத்துப்போயிருப்பதாகவும் தெரிவிக்கிறார். பொலிசார் திருட்டுப்போன காரை தேடி வருகிறார்கள்.

Submitted by Sachin Suresh

Facebook

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...