இறந்த கணவனின் உயிரணுக்கள் மூலம் குழந்தை பெற விரும்பிய பெண்: நீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

Report Print Balamanuvelan in கனடா

கனேடியர் ஒருவர் திடீரென இறந்துபோக, அவரது உயிரணுக்களை எடுத்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பி நீதிமன்றத்தை நாடினார் ஒரு பெண்.

பெயர் குறிப்பிடப்பாடாமல் D.T மற்றும் L.T என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள அந்த கனேடிய தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

தம்பதியர் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக D.T திடீரென இறந்துபோனார்.

அவரது உயிரணுக்களை தரவேண்டும், அவற்றை பயன்படுத்தி குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கோரி நீதிமன்றத்தை நாடினார் L.T. முதலில் நீதிபதி அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் D.Tயின் உயிரணுக்கள் சேகரிக்கப்பட்டு உறைநிலையில் பாதுகாத்து வைக்கப்பட்டன.

ஆனால், ஒருவருடைய இனப்பெருக்க அணுக்களை இன்னொருவருக்கு கொடுக்கலாமா என்பது குறித்த தெளிவான சட்ட நெறிமுறைகள் எதுவும் கனடாவில் இல்லை.

எனவே, ஏற்கனவே D.Tயின் உயிரணுக்களை அவரது மனைவிக்கு கொடுக்க சம்மதம் தெரிவித்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்றி எழுதவேண்டிய சூழல் நீதிபதிக்கு ஏற்பட்டது.

எனவே, D.Tயின் உயிரணுக்களை எடுத்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பி விண்ணப்பித்திருந்த அவரது மனைவியின் கோரிக்கையை நிராகரிப்பதாக அவர் தற்போது தெரிவித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புதிய தீர்ப்பில், D.Tயின் உயிரணுக்களை சேகரித்து சேமிக்க அதிகாரம் அளித்த உத்தரவு ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பைக் கேட்டு வருத்தமடைந்த L.T, கணவனின் உயிரணுக்கள் தனது சொத்து என்ற வாதத்தை முன்வைத்தார்.

ஆனால், L.T வழக்கில் வென்றால் அவருக்கு கொடுப்பதற்காகத்தான் தான் அவரது உயிரணுக்களை பாதுகாக்க உத்தரவிட்டதாகவும், அதனால் அதை தனது சொத்து என L.T உரிமை கொண்டாடமுடியாது எனவும் கூறி அவரது வாதத்தை நிராகரித்துவிட்டார்.

தற்போதைய சட்ட சூழலின்படி, ஒருவர் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்திருந்தால் மட்டுமே இறந்தபின் அவரது இனப்பெருக்க அணுக்களை அகற்ற முடியும்.

இந்த வழக்கை பொருத்தவரையில், அப்படி எழுத்துப்பூர்வ ஒப்புதல் எதுவும் இல்லை என்று கூறிவிட்டார் நீதிபதி.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்