கனடாவில் காத்திருந்து உயிரிழந்த 223 பேர்! வெளியான முக்கிய மருத்துவ அறிக்கை

Report Print Raju Raju in கனடா
181Shares

கனடாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்து 223 பேர் கடந்தாண்டு உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பிலான அறிக்கையை Canadian Institute for Health Information வெளியிட்டுள்ளது.

அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டில் 2800 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கனடாவில் மேற்கொள்ளப்பட்டது.

இது கடந்த பத்தாண்டுகளை விட 33 சதவீதம் அதிகமாகும்.

அதே சமயம் 4,350 கனடியர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக கடந்தாண்டு இறுதியில் காத்திருந்தது தெரியவந்துள்ளது.

இதில் 223 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் நடந்துள்ளது.

அதாவது 1700 சிறுநீரக அறுவை சிகிச்சைகள் கடந்தாண்டு நடைபெறுள்ளன.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் 32 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணங்களாக நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் வயது முதிர்வு ஆகியவை உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்